ற்போது கோட்சாரத்தில் சனி வக்ரமாகி, வக்ர கிரகமான கேதுவுடன் ஒரே டிகிரியில் பயணிப்பதால், இக்காலகட்டத்தில் ஜாதகம் பார்க்க வருபவர்கள் ஐந்துவிதமான பிரச்சினைகள் தொடர்பாக ஜோதிடரை அணுகு கிறார்கள்.

1. தொழில் நெருக்கடி அல்லது வேலை இழப்பு, தொழில் தொடர்பான வழக்கு.

2. சொத்து தொடர்பான வழக்கு.

3. உறவினர்களிடையே பகை.

4. குலதெய்வம் தெரியாதவர்கள்.

5. பூர்வீகத்தைவிட்டு வெளியேறுதல்.

Advertisment

சனியின் பொதுத் தன்மைகள் ஒருவருக்கு, அவரவர் கர்மவினைப் படி பூர்வபுண்ணிய பலத்திற்கேற்ப நன்மை- தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வமுட்டாளைக் கூட மிகப்பெரிய பட்டம், பதவியில் அமரவைப்பார். அதேநேரத்தில் அதிபுத்தி சாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கிவீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லா தவன் என்னும் வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்குக் கிடையாது. பல காரி யங்களைக் கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்திக்காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

ஒருவருக்கு கெட்ட நேரம் வந்து விட்டால், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்சரி- என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும்முன்பே எல்லாம் நடந்து முடிந்திருக்கும். அதே நேரத்தில், சனியால் யோகப் பலன்கள் அனுபவிக்க வேண்டுமென்று ஜாதகத் தில் இருந்தால், வரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு.

சனியை தொழில்காரகன், கர்மகா ரகன், ஆயுட் காரகன், மந்தன் என கூறலாம். அதனால்தான் சனி துலா ராசியில் உச்சமடைகிறார். இவரை கர்மவினை அதிகாரி என்றும் கூறலாம். ஜாதகத்தில் சனியின் வலிமை பூர்வஜென்ம வலிமைக் கேற்பவே இருக்கும். 9-ஆம் இடம் என்னும் பாக்கிய ஸ்தானம் வலுப்பெற்றவர்களின் ஜாதகத்தில் சனி வலிமையாக இருப்பார். சனி கொடுத்தால் யாராலும் தடுக்கமுடியாது.

Advertisment

ஜனன ஜாதகத்தில் சனி வலிமை பெற்றவர்களுக்கு, தன் தசா காலத்தில் தான் நின்ற இடத்திற்கேற்ப ஏராளமான நற்பலன்களை வாரிவழங்குவார். உயர் பதவி, தொழில், அந் தஸ்து என எட்டாத உயரத்திற்கு ஏற்றி விடுவார். வலிமை இழந்தவர்களுக்கு நீசத் தொழில், வறுமை, சிறை தண்டனை கொடுத்து பாவ- புண்ணியங்களை உணர்த்தி, வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுப்பார். ஒரு ஜாத கத்தில் சனி அமர்ந்த இடத்தைவைத்தே பூர்வ ஜென்ம பாவ- புண்ணியபலனைக் கூறிவிடமுடியும்.

கேதுவின் பொதுத் தன்மை

ஒரு செயலை தாமதமாக நடத்தித் தருவதில் சனி பகவான் வல்லவர் என்றால், நடத்தவே விடாமல் செய்வதில் கேது பகவான் வல்லவர். இந்த ஒரு வாசகத்தைக் கொண்டே கேது பகவான் என்ன செய்வார் என்பதை அனைவராலும் யூகிக்க முடியும். சிலர் ‘"என்ன நடக்குதுன்னே தெரியல, புரியல' என்று கூறுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கண்ணுக்குத் தெரியாத, புரியாத அனைத்து பிரச்சினைக்கும் காரணகர்த்தா கேது பகவான்.

கேது பிரிவினையத் தரக்கூடிய கிரகம்.

கேது சட்டப்படியான அனைத்து செயல் களுக்கும் காரணகர்த்தா. சிக்கலான, தீர்க்க முடியாத அனைத்து பிரச்சினைக்கும் இவரே காரணம்.

கேது, வலை கிரகம்

Advertisment

கர்மவினைப்படி ஜாதகர் அனுபவிக்க, வலையில் கச்சிதமாக சிக்கவைப் பவர். அனைத்து கிரகங்களுக்கும் நன்மை- தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. அனைத்து கிரகங்களும் ஜாதகத்தில் தசா, புக்தி, அந்தரக் காலத்தில் தன் ஆதிக் கத்தைச் செலுத்தும். ஆனால் வருட கிரகங் களான குரு, சனி, ராகு- கேதுக்கள் தசாபுக்தி களுடன், கோட்சாரத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

8-ஆம் பாவகம், 8-ஆம் அதிபதி, 8-ல் நின்ற கிரகம் சம்பந்தப்படும்போது மட்டுமே வம்புவழக்கு வரும். 8-ஆம் பாவகம் சம்பந்தப் படாமல் வழக்கு வரவே வராது. கோட் சாரமும், 8-ஆம் பாவகமும் சம்பந்தம் பெறும் போது பிரச்சினை கடுமையாகவும், நீண்ட காலத்திற்கும் இருக்கும். 8-ஆம் பாவகம் சம்பந்தம் பெறாமல் கோட்சார கிரகங்களால் ஏற்படும் விளைவு குறுகியகாலத்திற்கு இருக்கும்.

1. தொழில் நெருக்கடி, வேலை இழப்பு, தொழில் தொடர்பான வழக்குகள்

கடந்த பத்து ஆண்டுகளாக சொந்தத் தொழில் ஆர்வம் மக்களிடையே அதிகமாகிக் கொண்டு வருகிறது. சொந்தத் தொழில் செய்ய முன்வருபவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டம் மற்றும் அரசு, தனியார் நிதிநிறு வனங்கள் கடனுதவி செய்து உதவிக்கரம் நீட்டு வதால், சொந்தத் தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இத்தகை யவர்களுக்கு 10- ஆம் அதிபதி, 10- ல் நின்ற கிரகம், 10-ஆம் இடத்தைப் பார்த்த கிரகம், சனி, லக்ன சுபருடன் சம்பந்தம் பெற்று சுபத்தன் மையுடன் இயங்க வேண்டும். லக்னம் வலிமை யுடன் இயங்க வேண்டும். இந்த விதிக்குப் பொருந்தாத அமைப்புடைய ஜாதகம், கோட்சார கிரகங்களின் தாக்கத்தை சமாளிக் கமுடியாமல் நிலை தடுமாறுகிறது.

தற்போது கோட்சாரத்தில் தொழில் காரகன் சனி தடை, வம்பு வழக்கைத் தரும் கேதுவுடன் நெருக்கமான பாகையில் இணைந் திருப்பதால், சொந்தத் தொழில் செய் பவர்கள் தொழிலில் ஏற்ற- இறக்கம், தடை, தாமதம், பணவிரயம், பண இழப்பு, தவறான தொழில்முதலீடு செய்து பாதிப் படைகிறார்கள். அதிக முதலீடு செய்த முதலீட்டாளர்கள், தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர்கள்கூட மிகச் சாதாரணமாக, கண்ணிமைக்கும்முன் தொழிலில் சரிசெய்ய முடியாத இழப்பை சந்திக்கிறார்கள். இதனால் தொழிலைவிட்டு விலகவும் முடியாமல், தொழிலைத் தொடரவும் முடியாமல் மன உளைச்சலை சந்திக்கிறார்கள்.

தொழிலாளர்களுக்கும் முதலீட்டாளர் களுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, தொழிலாளிகள் வேலைக்குச் செல்லாமல் முதலீட்டாளர்கள்மீது வழக்கு தொடர்ந்து, முதலீட்டாளர்களுக்கு தொழில்முடக்கமும், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு வழக்கும் மிகுதியாகிறது.

lakshmi

நல்ல வருமானம் தரும் வேலையில் இருப்பவர்கள், அரசு அலுவலர்கள் காரணமே இல்லாமல் "மெமோ' வாங்குவது, வேறு ஊருக்கு மாற்றலாவது, மேலதிகாரிகளிடம் இணக்கமில்லாமை போன்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள் .தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களை திடீரென்று நீக்கி விடுதல், சம்பளத்தைக் குறைத்தல் அல்லது காலம் தாழ்த்தி சம்பளம் தருவது, இரண்டு பேர் செய்யவேண்டிய வேலையை ஒருவரே செய்யவேண்டிய நிலை, இரவு வேலைக்குச் செல்லவேண்டிய நிலை போன்ற காரணங் களால் குடும்பத்திற்கு வருமானமின்றி, தினமும் போராடி, அடுத்த வேலை எப்பொழுது கிடைக்குமென்ற மனவேதனையை அனுபவிக் கிறார்கள்.

இரண்டு வக்ர கிரகங்களின் இணைவு மக்களைப் பெரிதும் பாதிப்படையச் செய் கிறது. 8, 12-ஆம் பாவகத்துடன் சம்பந்தப் பட்டு தசை நடப்பவர்களுக்கு பிரச்சினை கடுமையாகவும், மற்றவர்களுக்கு குறுகிய கால பிரச்சினையாகவும் இருக்கும். இதில் மிகக்குறிப்பாக, ஜனன கால ஜாதகத்தில் மிதுனத்தில் சனி அல்லது கேது இருப் பவர்கள், சனி, கேது இரண்டும் இருப் பவர்கள் அல்லது தனுசில் சனி அல்லது கேது இருப்பவர்கள், சனி, கேது இரண்டும் இருப்பவர்கள் கடுமையான மன உளைச் சலுடன் ஜோதிடரை சந்திக்கிறார்கள். இதிலிருந்து மீள்வதற்கான எளிய பரிகாரங்கள்:

பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் தூக்குவோர், துப்புரவுத் தொழி லாளிகள் போன்றவர்களுக்குச் செய்யும் உதவிகள் நல்ல பலன் தரும்.

திருநள்ளாறு சென்று சனி பகவானை வழிபட்டு அன்னதானம் செய்ய வேண்டும்.

சனிப் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வார்ச்சனை செய்து வழிபடலாம்.

சனிக்கிழமை ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாற்ற வேண்டும்.

தொழிலாளிகள், வேலையாட்களால் பிரச்சினையை சந்திப்பவர்கள்- சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நாட்களில் சிவ வழிபாடு, அன்னதானம் செய்வது சிறப்பு.

2. சொத்துகள் தொடர்பான வழக்கு

சாதாரண மனிதர்முதல் வசதிபடைத் தவர்வரை அனைவரின் விருப்பமும் சொத்து சேர்க்கவேண்டும் என்பதாகும். சிலருக்கு சொத்து எதிர்பாராதவிதமாக எளிதில் அமைந்துவிடும். ஒருசிலருக்கு கடின முயற்சிக்குப் பிறகு அமையும். ஒரு சிலருக்கு அமையும் சொத்து சட்டச்சிக்கல் உடையதாகி நீதிமன்றத்தை அணுக வைக்கிறது அல்லது சொத்துகள் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டு வழக்குண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் எப்பொழுது ஜாதகரை பாதிக்கும், வழக்குகளிலிருந்து விடுபடும் காலம் எப்பொழுது, கோட்சார சனியும், கேதுவும் என்ன சம்பந்தம் என்பதைக் காணலாம்.

சனி- கர்மக்காரகன்.

கேது- வம்பு, வழக்கு, பிரிவினை, சட்டரீதியான பிரச்சினைகள்.

செவ்வாய்- பூமிகாரன்.

செவ்வாய் விவசாய நிலத்தைக் குறிக்கும்.

ஜனனகால ஜாதகத்தில் செவ்வாய்க்கு திரிகோணத்தில் கேது இருந்தாலோ, செவ் வாயின் பார்வை கேதுவுக்கு இருந்தாலோ, நான்கில் கேது அல்லது செவ்வாய்- கேது இணைவிருந்தாலோ வில்லங்கமான சொத்து, சொத்தால் பணமுடக்கம் ஏற்படும்.

மூலப் பத்திரம், "ஈசி' ஆகியவற்றின்மூலம் வேறு யாராவது சொத்தின்மீது உரிமை கொண்டாடுவார்கள். சொத்து மதிப்பு ஏறாது.

சொத்து தொடர்பான வழக்கு, தகராறு இருந்தே தீரும். மிகச்சுருக்கமாகச் சொன்னால் செவ்வாய்- கேது சம்பந்தம் எந்த வகையில் இருந்தாலும், சொத்தால் பிரச்சினை உண்டு.

புதன்- காலிமனை, கல்விக்கூடம், தோட் டத்தைக் குறிக்கும். புதனுக்கு திரிகோணத் தில் கேது இருந்தால் அல்லது புதன், கேது சமசப்தமப் பார்வை இருந்தால் வீட்டு மனை, தோட்டம், கல்விக்கூடக் கட்டடங்கள் தொடர்பான வழக்கு இருக்கும். புதனுடன் கேது சேரும்பொழுது கையெழுத்து மாற்றம், சர்வே எண் திருத்தம், போலி ஆவணம்செய்து பத்திர மோசடி நடக்கும். இப்பொழுது முறைப் படுத்தப்பட்ட அரசின் சட்டதிட்டங்களால் பத்திர மோசடி, போலி பத்திரம் முறைகேடுகள் குறைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

சுக்கிரன்- கட்டப்பட்ட வீடு, கட்டடங் களைக் குறிக்கும். சுக்கிரனுக்கு திரிகோணத் தில் கேது இருந்தால் அல்லது சுக்கிரன்- கேது சமசப்தமப் பார்வை இருந்தால் வீடு, கட்ட டங்கள் தொடர்பான வழக்கு இருக்கும்.

இப்பொழுது கோட்சார சனி- கேது இணைவால், மிதுனம், கன்னி, கும்ப லக்னத் தைச் சேர்ந்தவர்களும், ஜனன ஜாதகத்தில் தனுசு, மிதுனம், கன்னியில் செவ்வாய் அல்லது கேது இருப்பவர் களும், செவ்வாய், கேது இணைவு இருப்பவர்களும் சொத்து தொடர்பான சட்டநெருக்கடியில் இருக் கிறார்கள் அல்லது சொத்து தொடர்பான பண இழப்பை சந்திக்கிறார்கள். இதை ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம்.

உதாரணம்-1

இந்த ஜாதகர் சந்திர தசையின் சுக்கிர புக்தியில், ஒரு கோடி மதிப்புள்ள ஒரு நிலத்தை 35 லட்சத்திற்கு வாங்கினார். நிலத்தின் உரிமையாளர் பணக் கஷ்டத்திற்காக, நிலத்தை மிகக்குறைந்த விலைக்கு தருவதாகக் கூறியதை நம்பி ஜாதகர் நிலத்தை வாங்கியுள்ளார். நகரின் மையப் பகுதியில் நிலம் இருந்ததால், ஜாதகர் எதையும் யோசிக்காமல் வாங்கிவிட்டார்.

அன்றைய கோட்சாரத்தில் மகரத்தில் செவ் வாய் உச்சமாக கேதுவுடன் இணைந்திருந்தது.

செவ்வாய் தசை ஆரம்பமானதும், ஜாத கருக்கு வீடுகட்டும் ஆசை வந்தவுடன் எஞ்ஜினீ யரை அழைத்து நிலத்தை பரிசோதித்தபோது, "கிணறு இருந்து மூடப்பட்ட இடம். வீடு கட்டினால் கட்டடம் சிறப்பாக இருக்காது' என்று கூறிவிட்டார். இதற்கான ஜோதிட ரீதியான காரணத்தை ஆய்வு செய்வோம்.

இந்த ஜாதகத்தில் லக்னத்தின் ஆரம்பப் புள்ளியே கேதுமீது உள்ளது. ஜனனச் செவ்வாயின் 4-ஆம் பார்வை ஜனன- கோட் சார கேதுவின்மீது படுவதால் சொத்தால் பிரச்சினை, வம்பு, வழக்கு ஏற்பட்டது. கோட் சார சனியின் 10-ஆம் பார்வை ஜனனச் செவ்வாய், சனியின்மேல் படுகிறது. செவ்வாய்- சனியின் நேரடிப் பார்வை சொத்து, சுகத்தைக் குறிக்கும் 4-ஆம் இடமான மீனத் தின்மீது படுகிறது. செவ்வாய், சனியின் பார்வை பட்ட இடம் பலன் தராது என்பது அனைவரும் அறிந்ததே.

சந்திர தசையின் சுக்கிர புக்தியில் நிலம் வாங்கியுள்ளார். தசாநாதன் சந்திரன் ஜாத கருக்கு 8-ஆம் அதிபதி. புக்திநாதன் சுக்கிரன் 6- ஆம் அதிபதி கேதுவின் சாரம் என்பதால், 8-ஆம் அதிபதி வேலையான வம்பு வழக்கையும், பயன்படாத சொத்தில் பணத்தை முடக் கவும் செய்துவிட்டது.

ஜாதகத்தில் மாந் தியையும் சேர்த்து ஐந்து கிரகங்கள் ராகு- கேதுவின் சாரத்தில் உள்ளன. மூன்று கிரகங்கள் 8-ஆம் அதிபதி சந்திரன் சாரத்திலுள்ளன. அதிக கிரகங்கள் ராகு- கேதுவின் சாரத்தில் இருந் தால், ஜாதகரின் கண்ணை மறைத்து பிரச்சினையில் சிக்கவைக்கும். ஜாதகருக்கு சரியான முடிவெடுக்கும் திறன் இருக்காது. ‘ராகு ஆசை, கேது நிராசை‘ என்பதை பலமுறை கூறியிருக் கிறேன். லக்னப் புள்ளி கேதுமேல் இருப்ப தால் நிராசை இருந்துகொண்டே இருக்கும்.

1, 4-ஆம் அதிபதி (குரு), 7, 10-ஆம் அதிபதி (புதன்), 2, 3-ஆம் அதிபதி (சனி) என ஆறு பாவகங்கள், வக்ர கிரகங்களால் கட்டுப்படுத் தப்படுவது சுபமல்ல.

நடப்பில் செவ்வாய் தசை, செவ்வாய் புக்தி. புதன் வீட்டில் செவ்வாய் சிறப்பல்ல. கோட்சார சனியின் 10-ஆம் பார்வை ஜனன சனி, செவ்வாய்க்கு இருப்பதால், சொத்தால் மன வேதனை, பண இழப்பு இருக்கும்.

4-ஆம் அதிபதி குரு 11-ஆம் இடமான லாப ஸ்தானத்தில் இருப்பதால், சொத்தின் மூலம் வருமானம் உண்டு என்பதால், நிலத்தை கார் ஷெட் கட்டி வாடகைக்குவிட ஆலோசனை வழங்கப்பட்டது. நகரின் மையப்பகுதி என்ப தால் வருமானம் எளிதாகக் கிடைக்கும்.

பரிகாரம்

சொத்து தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் செவ்வாய்க்கிழமை, சனிக் கிழமைகளில் எமகண்ட நேரத்தில் விநாயகர், ஆஞ்சனேயரை வழிபடவேண்டும்.

செவ்வாய், சனிக்கிழமை பிரதோஷ நாட்களில் சரபேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு, அபிஷேகத்திற்கு முன்பு செய்யப்படும் எண்ணெய்காப்பிற்கு நல்லெண்ணெய் தரவேண்டும்.

தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு உளுந்து வடைமாலை சாற்ற வேண்டும்.

சிவன் கோவிலுக்கு நல்லெண்ணெய் தானம்செய்ய வேண்டும்.

செவ்வாய்க்கிழமை ராகுவேளையில் முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபட வேண்டும்.

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் 11.00 மணிமுதல் 12.00 மணிக்குள் செவ்வாய் ஓரையில் சண்முகக் கவசம் பாராயணம் செய்யவேண்டும்.

சனி, கேது சம்பந்தம் என்பது பின் தொடரும் நிழல் கர்மா. சொத்து தொடர் பான பிரச்சினைக்கு, சோழிப் பிரசன்னம் மூலம் நிழல் கர்மாவுக்கான காரணத்தை அறிந்து உரிய வழிபாடு செய்தால் நிரந்தர தீர்வு காணலாம்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406